Rock Fort Times
Online News

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை – மேல்முறையீடு செய்ய நீதிமன்றம் அவகாசம்

பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாஜக எம்எல்ஏவுமான புர்னேஷ் மோடி தொடர்ந்த வழக்கில் குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இவ்வழக்கில் 4 ஆண்டுகளுக்கு பிறகு சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிட்டத்தக்கது. இதனிடையே தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு உடனடியாக பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பில் ராகுல் காந்தி மேல் முறையீடு செய்ய 30 நாட்களில் அவகாசம் வழங்கியுள்ளது. மேல்முறையீடு செய்ய வசதியாக ராகுல் காந்திக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.15,000 பிணைத்தொகை செலுத்தி ராகுல் காந்தி ஜாமின் பெற நீதிமன்றம் உத்தரவிட்டது என்பதால் ராகுல் காந்தியை கைது செய்ய வாய்ப்பில்லை.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்