நான் வெற்றி பெற்றால் காந்தி மார்க்கெட் பிரச்சனைக்கு சுமுக தீர்வு காண்பேன்- திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா வாக்குறுதி…!
திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா தனது தொகுதிக்குட்பட்ட திருச்சி பாலக்கரை பகுதியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் திருச்சி தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட, நாடாளுமன்றத்தில் எனது குரல் ஒலிக்க இந்த தேர்தலில் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம், நான் வாக்கு சேகரிக்க செல்லும் இடமெல்லாம் நாங்கள் எதிர்பார்த்ததை விட எழுச்சியுடன் ஆரவாரத்துடன் அமோக வரவேற்பு அளிக்கின்றனர். திருச்சி மாநகரத்தின் மையப்பகுதியில் செயல்படும் காந்தி மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என வியாபாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எந்தத் திட்டமாக இருந்தாலும் பொதுமக்களுக்கு நன்மை தரும் திட்டமாக இருக்க வேண்டும் என்பதில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக உள்ளார். எனவே, காந்தி மார்க்கெட் மாற்றம் குறித்து பொதுமக்கள் மற்றும் காந்தி மார்க்கெட் வியாபாரிகளிடம் கருத்து கேட்டு அதன் அடிப்படையில் இருதரப்பிற்கும் சாதக, பாதகம் இன்றி உரிய நடவடிக்கை மேற்கொள்வேன். பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் திருச்சியில் பிரச்சாரம் மேற்கொள்ள வருகின்றனர். ஆனாலும் திருச்சியில் அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என்று தெரிவித்தார். பிரச்சாரத்தின்போது திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர்
ஜெ.சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், வளர்மதி, மாவட்ட இணை செயலாளர் ஜாக்குலின், மாவட்ட துணைச் செயலாளர்கள் வனிதா,பத்மநாதன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாணவர் அணி மாவட்ட செயலாளர் என்ஜினியர் இப்ராம்ஷா, எம்ஜிஆர் மன்ற செயலாளர் கலிலுல் ரகுமான், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் டி.ஆர்.சுரேஷ்குமார், பகுதி செயலாளர்கள் என்.எஸ்.பூபதி, எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, சுரேஷ்குப்தா, ரோஜர், ஏர்போர்ட் விஜி மற்றும் நிர்வாகிகள் என்ஜினியர் ரமேஷ், சொக்கலிங்கம், ரவீந்திரன், மார்க்கெட் பிரகாஷ், வாழைக்காய் மண்டி சுரேஷ், கயிலை கோபி, பொன்.அகிலாண்டம், மற்றும் தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்று இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.