Rock Fort Times
Online News

விராலிமலை சுங்கச்சாவடியில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல்…

கரூர் எம்பி தொகுதிக்குட்பட்ட விராலிமலை அருகே உள்ள பூதகுடி சுங்கச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி குருமாரிமுத்து தலைமையில் போலீசார் நேற்றிரவு 9 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் திருச்சி தனியார் ஏஜென்சியை சேர்ந்த திண்டுக்கல் நிலக்கோட்டை அருகே உள்ள மாவூத்தம்பட்டியை சேர்ந்த ஆனந்தன்(34) மற்றும் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் உள்பட 4 பேர் இருந்தனர்.திருச்சியில் உள்ள தனியார் கோல்டு நிதி நிறுவனத்திலிருந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஒரு பிரபல நகைகடைக்கு ரூ.60,34,421 மதிப்புள்ள 1206.33 கிலோ ஆபரண தங்கம் உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் இலுப்பூர் ஆர்டிஓ தெய்வநாயகியிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை காட்டி விட்டு தங்கத்தை வாங்கி செல்லுமாறு கூறிய ஆர்டிஓ, அந்த தங்கத்தை கருவூலத்தில் ஒப்படைத்தார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்