எடப்பாடி பழனிச்சாமி 27 ஆம் தேதி திருச்சி வருகை- வரவேற்க தயாராகிறது திருச்சி புறநகர் வடக்குமாவட்ட அதிமுக
திருச்சி மாவட்ட அதிமுக இணை செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இந்திராகாந்தி இல்ல திருமண விழாவில் வரும் 27 ஆம் தேதிகாலை 11 மணிக்கு அதிமுக பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள திருச்சி வருகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடர்பாக, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் பிரின்ஸ் தங்கவேல், மாவட்ட இணை செயலாளர் இந்திராகாந்தி, முன்னாள் அமைச்சர் பூனாட்சி, வளா்மதி, அம்மா பேரவை இணை செயலாளர் செல்வராசு, எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் செல்வராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் சுப்பு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி முருகன், மல்லிகா சின்னசாமி, மாவட்ட பொருளாளர் சேவியர், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல இணை செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் அறிவழகன் விஜய், ரமேஷ், அன்பு பிரபாகரன், பேரூர் கண்ணதாசன், புல்லட் ஜான், விவேக், ஏவூர் நாகராஜன், பொன்.காமராஜ், அன்னை கோபால், துரைராஜ், ஒன்றிய செயலாளர்கள் நடராஜன், ஜெயக்குமார், ஆதாளி, சேனை செல்வம், வெங்கடேசன், ஆமூர் ஜெயராமன், ஜெயம், முத்துக்கருப்பன், ஜெயக்குமார், பிரகாசவேல், அழகாபுரி செல்வராஜ், ராம்மோகன், ராஜமாணிக்கம், குமரவேல், கடிகை கோபால், நகர செயலாளர் அமைதி பாலு, பேரூராட்சி செயலாளர்கள் கிட்டு, செந்தில்குமார், ராஜாங்கம், திருஞானம், ராஜேந்திரன், ராமச்சந்திரன், துரை சக்திவேல், சுப்ரமணியன், பகுதி செயலாளர் டைமண்ட் திருப்பதி, சுந்தர்ராஜன், மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் நெடுமாறன், ஶ்ரீரங்கம் ரவிசங்கர், மருதை, வட்ட செயலாளர்கள் செந்தில்குமார், பிரகாஷ், சேகர், பொன்னர், மகேஷ், S.K.ராஜ், செல்வம், மனோகர், கலைமணி, தமிழரசன், கொளஞ்சி, ஏகாம்பரம், அற்புதம், நல்லுசாமி, VNR செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.