நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு தேர்தல் பறக்கும் படையினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கண்ணனூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி இளையராஜா தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முசிறியில் இருந்து துறையூர் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 300 அதிமுக கரை போட்ட துண்டுகள் இருந்தது. அந்தக் காரில் டிரைவரை தவிர வேறு யாரும் இல்லை. இது குறித்து பெரம்பலூர் மாவட்டம் செஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் பிரசாந்திடம் விசாரணை செய்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். மேலும், அந்த துண்டுகளை கொண்டு செல்வதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அதனை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து துறையூர் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.