தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக குழந்தைகள் கடத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இதுபோன்று குழந்தை கடத்தல் சம்மந்தமான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம், வதந்திகள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் திருச்சி சோமரசம்பேட்டை அதவத்தூர் கிராம பகுதியில் குழந்தை கடத்துபவர்கள் வந்துள்ளதாகவும், கடத்தல்காரர்கள் காரில் வந்து இறங்கியுள்ளதாக வாட்ஸ்அப் குரூப்பில் தகவல் பரவியது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவிட்டதன் பேரில், சோமரசம்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தை கடத்தல் கும்பல் யாரும் வரவில்லை என்பதும், திட்டமிட்டு யாரோ இதை சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியது தெரியவந்தது. இதுதொடர்பாக வதந்தி பரப்பிய குழுமணி பேரூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த மகாமுனி (25) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.