திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அன்னபூர்ணா நகரை சேர்ந்தவர் லெ.அர்ஜூனன்(63). இவர், மனைவி மலர்விழி(50), மகன் விஷ்ணு(30), மகள் மோனிதா(28),
4 வயது பேரன் தவசி ஆகியோருடன் காரில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்றார். பின்னர் அங்கிருந்து அனைவரும் மண்ணச்சநல்லூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். திருச்சி–மதுரை தேசியநெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த முக்கன் பாலம் அருகே கார் வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி பள்ளத்தில் பாய்ந்தது. இதில், கார் அப்பளம்போல நொறுங்கியது. இந்த விபத்தில் அர்ஜூனன், மலர்விழி இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விஷ்ணு, மோனிதா, தவசி ஆகியோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விபத்தில் படுகாயத்துடன் கிடந்தவர்களை மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உயிரிழந்த கணவன், மனைவி உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Comments are closed, but trackbacks and pingbacks are open.