Rock Fort Times
Online News

போதை சரக்கு வாகனம் பாதையில் தடுமாறி விபத்து – கரூா் சாலையில் போக்குவரத்து பாதிப்பு .

கரூர் மாவட்டம் ஆர்.புதுக்பேட்டையில் உள்ள தமிழ்நாடு அரசு வாணிப நுகர்பொருள் கழகம் குடோனில் இருந்து மாயனூர் பழைய ஜெயங்கொண்டம் மகாதானபுரம் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளுக்கு மதுபான பாட்டில்கள் சரக்கு வேனில் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சரக்கு வேனினை முனையனூரைச் சேர்ந்த தனபால் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆர்.புதுக்கோட்டை என்ற இடத்தின் வந்தபோது சரக்கு வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் டிரைவர் தனபால் மற்றும் லோடு மேன்கள் இருவரும் காயம் அடைந்தனர்.மேலும் வேனிலிருந்த பல லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் சேதமடைந்தன.இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து டாஸ்மார்க் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் மற்றொரு சரக்கு வாகனம் கொண்டு வரப்பட்டு அதில் சேதமடையாத மதுபான பாட்டில்கள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன.இதனால் திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்