தமிழக பாடநூல் கழகம் சார்பாக வெளியிடப்படும் அனைத்து புத்தகங்களையும் தமிழகம் முழுவதும் உள்ள இடங்களில் விற்பனைக்கு கொண்டு செல்லும் வகையில் திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள 2 புத்தகக் கடைகளில் 2 ஸ்டால்களை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பாக பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ளோம். மொழி பெயர்த்துள்ளோம். தற்போது யாரும் பார்க்காத வ.உ.சி புகைபடத்துடன் கூடிய புத்தகத்தை வெளியிட்டுள்ளோம். சென்னையில் ஹிக்கிம்பாதம்ஸ் புத்தக நிலையத்தில் ஸ்டால் அமைத்துள்ளோம். இதேபோல திருச்சியில் சிங்காரத்தோப்பு பகுதியில் ராசி மற்றும் சுமதி புத்தக நிலையங்களில் ஸ்டால் அமைத்துள்ளோம். இதேபோல, தமிழகம் முழுவதும் 100 இடங்களில் கொண்டு வர உள்ளோம். புதிய கல்விக் கொள்கைக்கு புதிய கமிட்டி உருவாக்குவோம். நம்முடைய மாநிலத்திற்கு என்ன தேவையோ அதன்படி கல்வி திட்டம் உருவாக்கி உள்ளோம். முதலாவது மத்திய பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கல்வியை கொண்டுவர வேண்டும், அதை நோக்கி தான் எங்கள் பயணம் இருக்கிறது. மாணவர் படிப்பில் அரசியல் செய்யக்கூடாது. புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு என்றும் ஏற்றுக் கொள்ளாது என தெரிவித்தார்.அப்போது கிழக்கு மாநகர திமுக செயலாளர் மு.மதிவாணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.