Rock Fort Times
Online News

தமிழ் வளர்ச்சி செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தந்தை உடல்நலக்குறைவால் காலமானார்…

தமிழ் வளர்ச்சி செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தந்தை உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். திமுகவில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக இளைஞரணி செயலாளராக இருந்து வந்த மு.க ஸ்டாலின் அப்பதவியிலிருந்து விலகியதை அடுத்து அப்பதவிக்கு திருப்பூர் மாவட்டம் கொங்கு மண்டலத்தை சேர்ந்த மு.பெ.சாமிநாதன் என்னும் வெள்ளகோவில் சாமிநாதன் புதிய இளைஞரணி செயலாளராக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து உதயநிதி ஸ்டாலினுக்காக அந்த இளைஞர் அணி பதவியை சாமிநாதன் விட்டுக்கொடுத்தார். இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கேயம் தொகுதியில் போட்டியிட்டு மு. பெ. சாமிநாதன் வெற்றி பெற்றார். இதனையடுத்து அவருக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சராக இருந்து வருகிறார். இந்நிலையில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதனின் தந்தை பெருமாள் சாமி கவுண்டர் (94) வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் இன்று 7:50 மணி அளவில் காலமானார். அவரது இறுதிச்சடங்குகள் சொந்த ஊரான திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் வைத்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் தந்தை மறைவுக்கு தொண்டர்கள் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்