திருச்சி குழுமிக்கரை பகுதியில் தனி அடக்க ஸ்தலம்- அமைச்சர் கே.என்.நேருவிடம் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை…!
திருச்சி மேற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருச்சி மேற்கு தொகுதியில் குழுமிக்கரை பகுதியில் இஸ்லாமிய மக்களுக்கு தனி அடக்க ஸ்தலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து மாவட்ட தலைவர் கவுன்சிலர் அ.பைஸ் அகமது தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்நிகழ்வில் ம.ம.க மாவட்ட செயலாளர் இப்ராஹிம், த.மு.மு.க மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஷா, தலைமை செயற்குழு உறுப்பினர் சபீர், மாநில துணை செயலாளர்கள் முகமது ரபீக், அசாருதீன், 29வது வார்டு தலைவர் கபீர், செயலாளர்கள் அப்துல்நாசர், காஜா, மாவட்ட அணி நிர்வாகிகள் தென்னூர் சதாம், உஸ்மான் ஆகியோர் உடன் இருந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.