திமுக சார்பில் போட்டியிட விரும்புவர்களுக்கான விண்ணப்பங்கள் வருகிற 19ம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெறவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் வருகிற 19-2-2024 முதல் அண்ணா அறிவாலயத்திலுள்ள தலைமைக் கழகத்தில் கிடைக்கும். போட்டியிட விரும்புகிற கழகத் தோழர்கள் விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து, 1-3-2024 முதல் 7-3-2024 மாலை 6 மணிக்குள் தலைமைக் கழகத்தில் சேர்ப்பித்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் – ரூ.50,000. விண்ணப்ப படிவம் ரூ.2,000 ஆகும்.
இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.