வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்க்க திருச்சி மத்திய மாவட்ட திமுக செயற்குழுவில் தீர்மானம்…
திருச்சி மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் தில்லைநகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு வழிகாட்டுதலின்படி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில், மாநகரச் செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன் முன்னிலையில் இன்று(14-02-2024) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருகிற மார்ச் 1-ந் தேதி கழகத் தலைவரும், முதல்- அமைச்சருமான
மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஒன்றிய, நகர, பேரூர் கழக பகுதிகளில் கட்சி கொடியேற்றி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கி ஆண்டு முழுவதும் பிறந்தநாளை கொண்டாட வேண்டும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முகவர்கள், கிளைச் செயலாளர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும். அரசின் 3 ஆண்டு சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து கூறி வெற்றிக்கு பாடுபட வேண்டும். “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” பாசிசம் மீளட்டும் ஜனநாயகம் வெல்லட்டும் என்ற தலைப்பில் தொகுதி வாரியாக பிரச்சாரக் கூட்டம் வருகிற 16, 17, 18 ஆகிய மூன்று தினங்களில் நடைபெற இருக்கிறது. இதில், திருச்சியில் வருகிற 17-ஆம் தேதி திமுக பொருளாளர் டி.ஆர் பாலு கலந்து கொண்டு பிரச்சார கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார். இதேபோல் 18-ம் தேதி பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பொன்முடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதில் கழக தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் மாணவர் அணி இன்ஜினியர் ஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்தநல்லூர் கதிர்வேல், மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் பி.ஆர்.சிங்காரம், மாநகரத் துணைச் செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ், தில்லைநகர் கண்ணன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த், பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், கமால் முஸ்தபா, இளங்கோ, ராம்குமார்,மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, அந்தநல்லூர் சேர்மன் துரைராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.