Rock Fort Times
Online News

திருச்சி நம்பர் – 1 டோல்கேட் அருகே சாலை விபத்து – ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம்

திருச்சி நம்பர் – 1 டோல்கேட் பைபாஸ் அருகேயுள்ள ஒய் ரோட்டில் முன்னாள் சென்ற சரக்கு வாகனம் மீது பின்னால் வந்த மோட்டார் பைக் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் படுகாயம் அடைந்தார். திருச்சி தீரன் மாநகர் கௌரிநகர் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகன் 21 வயதான ஹரிகரன். இவருடைய நண்பர் திருச்சி திருவெறும்பூர் பழைய பால்பண்ணை அருகில் உள்ள பூலோகநாதர் கோயில் தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் 20 வயதான வெற்றிவேல். இவர்கள் இருவரும் பைக்கில் திருச்சியில் இருந்து சமயபுரம் நோக்கி திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.மோட்டார் பைக்கை ஹரிஹரன் ஓட்டிச் சென்றுள்ளார் வெற்றிவேல் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். அதேபோல் திருநெல்வேலி மாவட்டம் பாப்பாங்குளம் மேலவீதி மயிலாபுரம் தெருவைச் சேர்ந்த 38 வயதான துரை சரக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.இந்நிலையில் நம்பர் – 1 டோல்கேட் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒய் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற சரக்கு வாகனம் மீது பின்னால் வந்த மோட்டார் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹரிஹரன்,வெற்றிவேல் இருவரும் படுகாயம் அடைந்தனர்.விபத்தைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் செல்லும் வழியிலேயே வெற்றிவேல் பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டார் பைக் ஓட்டிச் சென்ற ஹரிஹரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்