தமிழக சட்டமன்றத்தில் இன்று காலை நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் 2023/24ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு அறையில் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி நாளை காலை வேளாண் பட்ஜெட்டை வேளாண்மைத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். புதன்கிழமை சட்டமன்றத்துக்கு விடுமுறை. அதைத்தொடர்ந்து 23ம் தேதி முதல் 3 நாள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். 29ம் தேதி முதல் மானியக்கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும். சட்டமன்ற கூட்டம் ஏப்ரல் 21ம் தேதி வரை நடைபெறும். இந்த தகவலை சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறினார்.