” சாலையை மூடக்கூடாது”- தென்னக ரயில்வே கோட்ட மேலாளரிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் மனு…
தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளரிடம், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் ஒரு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில், திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட மேலகல்கண்டார் கோட்டை, ஆலத்தூர், கீழகல்கண்டார் கோட்டை பகுதிகளை சுற்றி சுமார் 5000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்கள் பொன்மலை பகுதியில் உள்ள இரயில்வே பணிமனை, இரயில்வே மருத்துவமனை, கனரா வங்கி, டாக்டர் அம்பேத்கார் திருமண மண்டபம், இரயில்வே பள்ளிக்கூடங்கள் மற்றும் புகழ்பெற்ற பொன்மலை வார சந்தை போன்ற இடங்களுக்கு தடை இன்றி சென்றுவர, “C” TYPE பகுதியில் உள்ள தற்போதைய சாலை மிகவும் பயனுள்ளதாகவும், குறிப்பட்ட நேரத்தில் சென்றுவர வசதியாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த “C” TYPE சாலையை இரயில்வே நிர்வாகம் மூடுவதற்கு நோட்டீஸ் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அப்படி மூடப்படுமானால் பொதுமக்கள், இரயில்வே ஊழியர்கள் மேற்கூறிய இடங்களுக்கு சென்றுவர மிகவும் சிரமத்திற்கு உள்ளாவார்கள். ஆகவே, சாலையை மூடும் எண்ணத்தை கைவிடுமாறும், குண்டும் குழியுமாக உள்ள “C” TYPE சாலையை சீரமைத்து தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. மனு அளித்தபோது திருச்சி கிழக்கு மாநகர கழக செயலாளர் மு. மதிவாணன், எஸ்.ஆர்.எம்.யூ பொதுச்செயலாளர் வீரசேகரன், பகுதி கழகச் செயலாளர் தர்மராஜ், வட்டகழக செயலாளர் வரதராஜன் மற்றும் நிர்வாகிகள், பொன்மலை பகுதி பொதுமக்கள் உடன் இருந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.