திருச்சி பாபு ரோடு சுகதாஸ் மண்டித்தெருவை சோ்ந்த நடன கலைஞரான செந்தில்குமாா் மகள் மதுமிதா ( வயது 16). இவா், தனியாா் பள்ளி ஒன்றில் பிளஸ் -2 படித்து வந்தார். சமீபத்தில் நடந்த தேர்வில் இவர் 4 பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், செல்போனை அடிக்கடி பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதனை வீட்டில் உள்ளவர்கள் கண்டித்துள்ளனர். இதனால், மனமுடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வேலைக்கு சென்றிருந்த மதுமிதாவின் தாய் வீட்டிற்கு திரும்பியபோது மகள் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து கதறி அழுதார். பின்னர் மாணவியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோட்டை போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.