Rock Fort Times
Online News

சரியான ஆவணங்கள் இன்றி மின் இணைப்பு வழங்க பரிந்துரைத்த மின்வாரிய அதிகாரி மீது புகார்…

திருச்சி திருவெறும்பூரை சேர்ந்தவர் அந்தோணிதுரை(55). இவர், சோழமாதேவி ஊராட்சி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர், நவல்பட்டு காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சோழமாதேவி ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்த சந்திரா, சம்சாத் பேகம், அப்துல் ரகுமான், மும்தாஜ், பிரேமா, சாமிநாதன், தஸ்ஸுன் ஆகிய 7 பேர் புதிதாக தங்களது வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவதற்காக நான், நில உடமை சான்று கொடுத்தது போன்று போலியாக சான்று தயாரித்து மின் இணைப்பு பெற்றுள்ளனர். வீட்டிற்கு மின் இணைப்பு பெற வேண்டுமானால் அவர்களுக்குரிய கிரைய ஆவணம், சிட்டா, அடங்கல், பட்டா மற்றும் வீட்டு வரி, நில வரைபடம் ஆகிய சான்றுகளை அளித்து பெற வேண்டும். ஆனால், நவல்பட்டு இளநிலை பொறியாளர் எந்த அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் சான்றை ஒரு ஆவணமாக பயன்படுத்தி மின் இணைப்பு வழங்க முன் வந்தார் என்பது புதிராக உள்ளது. இது தவறான செயல்களுக்கு வழி வகுக்க முன்னுதாரணம் ஆகி விடும். மேற்கண்ட நபர்கள் மின் இணைப்பு பெற அறிவுறுத்தியது யார்?, போலியான கிராம நிர்வாக அலுவலர் சான்று தயாரித்தது எப்படி?, அதை தயாரித்து அளித்த நபர் யார்? என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மின் இணைப்பு வழங்க பரிந்துரைத்த நவல்பட்டு மின் வாரிய இளநிலை பொறியாளர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்