தமிழகத்தில் முதல்முறையாக திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் 63 வயது மதிக்கத்தக்க அமர்நாத் என்ற நோயாளிக்கு இருதய குழாயில் கால்சியம் படிமங்களால் ஏற்பட்ட அடைப்புகளை நீக்கியுள்ளனர். இந்த சிகிச்சை செய்வதற்கு தனியார் மருத்துவமனைகளில், சுமார் 8 லட்சம் வரை செலவாகும.; ஆனால் தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக இந்த சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, திருச்சி அரசு மருத்துவமனையின் டீன் நேரு உள்ளிட்ட மருத்துவர்கள இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர், முதல் முறையாக அறுவை சிகிச்சை என்று சொல்லக்கூடிய, நெஞ்சில் கோட்டை பிளந்து அறுவை சிகிச்சை செய்யாமல் நுண்துளைகள் மூலம் இந்த சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர. தற்போது சிகிச்சை அளிக்கப்பட்ட நோயாளியும் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
