தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகிற இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர் , பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது. திருச்சி மாநகரத்தில் 8 மையங்களில் 6556 பேர் இந்த தேர்வை எழுதினர். ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி மையத்தில் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது உதவி ஆணையர் நிவேதாலஷ்மி, ஆய்வாளர் அரங்கநாதன் ஆகியோர் உடனிருந்தனர். இத்தேர்வானது, காலை 10 மணி முதல் 12.40 மணி வரை நடந்தது.இதன் கண்காணிப்பு பணியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.