சென்னைக்கு ரேஷன் பொருட்களை கொண்டு செல்வதில் லாரி டிரைவர்கள் இடையே பிரச்சனை- போலீசார் பேச்சுவார்த்தை…
திருச்சி கே.கே.நகர் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த கிடங்கிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லாரிகளில் உணவுப்பொருட்கள் கொண்டு வரப்பட்டு சேமித்து வைக்கப்படும். பிறகு தேவைக்கேற்ப லாரிகளில் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்நிலையில், மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு வழங்கிடும் பொருட்டு இந்த சேமிப்பு கிடங்கில் இருந்து அரிசி உள்ளிட்ட பொருட்கள் லாரிகளில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ஆர்டர் பெற்று லாரிகளில் பொருட்களை ஏற்றி செல்கின்றனர். இதனை பார்த்த திருச்சி மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத்தினர் தங்களுக்கும் ஆர்டர் கொடுத்து லாரிகளில் பொருட்களை ஏற்றி செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. இதனால், இரண்டு சங்கத்தை சேர்ந்த லாரி டிரைவர்களிடையே பிரச்சனை ஏற்பட்டு மோதிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்த கே.கே.நகர் போலீசார் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் விரைந்து சென்று இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால், வெள்ள சேத பகுதிகளுக்கு லாரிகளில் நிவாரண பொருட்களை ஏற்றி செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.