Rock Fort Times
Online News

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவா் சுவாமி கோவிலுக்கு புதிய தோ்….

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில், மலை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட 8 லட்சம்  ரூபாய் மதிப்பிலான, முற்றிலும் தேக்கு மரத்தாலான தேரினை மங்கள் &  மங்கள் உரிமையாளர் மூக்கப்பிள்ளை வழங்கினார்.  இந்த தோினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் கலந்து கொண்டு அதன் புறப்பாடினை தொடங்கி வைத்தனா். தோ் புறப்பாடானது உற்சவர் மண்டபத்தில் துவங்கி , மாணிக்க விநாயகர் சன்னதியை சுற்றி வலம் வந்து மீண்டும் உற்சவர் மண்டபத்தில் நிலைநிறுத்தப்பட்டது. முன்னதாக மாணிக்க விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  அப்போது அமைச்சர்கள் முன்னிலையில் மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலின் பெண் ஓதுவார் ரூபாவதி மாணிக்க விநாயகர் பாடலை பாடினார்.   இந்த புதிய தேரினைஉற்சவ காலங்களில் பக்தர்கள் ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி இத்தேரினை இழுக்கலாம் என கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பஞ்சப்பூரில் ரூ.17.60 கோடி மதிப்பில் புதிய ஆம்னி பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா

1 of 917

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்