கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் சங்கரய்யா. ( வயது 102). இவர், சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று ( 15.11.2023 ) காலை அவர் உயிரிழந்தார். 80 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் ஈடுபட்ட சங்கரய்யா, சுதந்திர போராட்டத்திலும் ஈடுபட்டு சிறை சென்றவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சங்கரய்யாவிற்கு , தமிழக அரசு”தகைசால் தமிழர்” விருது வழங்கி கௌரவித்தது. அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.