திருச்சி சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர், கோவா சென்றுவிட்டு 3 நாட்களுக்கு முன் மீண்டும் திருச்சிக்கு வந்துள்ளார்.அதிலிருந்து தொடர் காய்ச்சல், தலைவலியால் அவதிப்பட்டு வந்த அவரை, தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்து விட்டார். என்ன வகையான காய்ச்சல் என்பதை, அரசு மருத்துவ குழுவினர் விரைவில் தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.தமிழ்நாட்டில் பரவலாக மீண்டும் காய்ச்சல் பரவிவரும் நிலையில், நண்பர்கள் யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம். முக கவசம் அணிந்து கொள்ளுங்கள். முடிந்தவரை அவசியமற்ற பயணங்களை தவிருங்கள். காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தாமல், தாமதிக்காமல் அருகிலுள்ள மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்ளுங்கள்.