திருச்சி மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினருக்கான ஆய்வு கூட்டம் ஏடிஜிபிஇஅருண்.ஐபிஎஸ்.இ தலைமையில் திருச்சி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையின் திருச்சி மண்டல காவல் அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம்இ திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையின் கூடுதல் காவல் துறை இயக்குனர் திரு.அருண் ஐபிஎஸ்.இ அவர்கள் தலைமையில்இ ரேஷன் பொருட்கள் கடத்தல்இ பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தையில் பொது விநியோகத் திட்ட பொருட்களை விற்பனை செய்வதை தடுப்பதற்கான குற்றங்கள் மீது எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளையும்இ மேற்கொண்டு குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான ஆலோசனைகளையும் இ குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வு கூட்டத்தில் திருச்சி மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையின் காவல் கண்காணிப்பாளர் திருமதி.சுஜாதா மற்றும் திருச்சிஇ தஞ்சாவூர்இ மயிலாடுதுறை சரகங்களின் உட்கோட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள்இ உதவி ஆய்வாளர்கள்இ ஆளுனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.