திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பாலசமுத்திரம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் தோளூர் பட்டியைச் சேர்ந்த கொத்தனார் வேலை செய்துவரும் கோபி என்பவரது மகன் மவுலிஸ்வரன் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று பள்ளி வளாகத்தில் நடந்த சிறப்பு பயிற்சி வகுப்பின்போது 10-ம் வகுப்பு மாணவன் மவுலீஸ்வரன் என்பவனை சக மாணவர்கள் 3 பேர் சேர்ந்து தாக்கி அடித்துக் கொலை செய்தனர். இந்த வழக்கில் அவனுடன் படித்த 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். இந்த சூழலில் பணியின்போது கவனக் குறைவாக இருந்ததாக பள்ளியின் தலைமையாசிரியர் ஈஸ்வரி, வகுப்பாசிரியர் ராஜேந்திரன், கணித ஆசிரியர் வனிதா ஆகியோர் இக்கொலை வழக்கின் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.