பாதுகாப்புடன் தீபாவளியை கொண்டாட விழிப்புணா்வு நிகழ்ச்சி…
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் நடைபெற்றது..
தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது புத்தாடைகள், பல வகையான பலகாரங்கள் அதிலும் முக்கியமாக பட்டாசுகள். பட்டாசுகளை பாதுகாப்பான முறையில் வெடிக்காததால் விபத்து ஏற்பட்டு பலர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகின்றனா். அதிலும் கண் மருத்துவமனைக்கு வருகின்ற நோயாளிகள் எண்ணிக்கை அதிகம். இதில் பெரும்பாலும் 10 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் அதிகம். இந்த விபத்தில் பார்வை இழந்தவர்களும் உண்டு. அதனால் தீபாவளி மகிழ்ச்சியாக மற்றும் பாதுகாப்பாக அமைய திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, மாவட்ட தீயணைப்பு துறை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி பட்டர்பிளை இணைந்து பாதுகாப்புடன் பட்டாசு வெடிக்கும் செயல்முறை விளக்கம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினா். இதில் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு , தீ விபத்து ஏற்பட்டால் அதற்கான முதல் உதவி மற்றும் செயல்முறை விளக்கம் குறித்து தீயணைப்பு மாவட்ட அலுவலர் அனுசியா முன்னிலையில் செய்து காண்பித்தனர்.
மேலும் இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக அறம் அசிஸ்டன்ட் ட்ரைனர் ஜெ.அரவிந்தன் மற்றும் ஏ.கே.எஸ் அறம் மீடியா ப்ரோமோஷன் சேர்மன் டாக்டர் சீனிவாசன் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். மேலும் கண் மருத்துவமனை சார்பில் தீயணைப்பு துறையை சேர்ந்த ஊழியர்களுக்கு தீ விபத்தில் சிக்கியவர்களுக்கும் முதல் உதவி செய்வது எப்படி என்பது குறித்து குறிப்பாக கண்களில் தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதல் உதவி குறித்தும் ஜோசப் கண் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் பிரதீபா விளக்கி கூறினார். இதில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் நர்சிங் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ரோட்டரி கிளப் பிரசிடெண்ட் மற்றும் ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுபா பிரபு செய்திருந்தனா்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.