சரண் அடைவதற்கு முன்பு லைவ் வீடியோ- கேரளா போலீசாரை அதிர வைத்த நபர்..! – யார் அந்த டொமினிக் மார்ட்டின்? பரபரப்பு வீடியோ
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் களமச்சேரி என்ற இடத்தில் ஜெபக்கூட்டம் நடைபெற்றிருக்கும்போது மூன்று வெடிகுண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கு கொண்ட இடத்தில் நடைபெற்ற வெடிகுண்டு வெடிப்புச் சம்பவம் காரணமாக 36 பேர் படுகாயம் அடைந்தனர் ஒருவர் சம்பவ இடத்தில் பலியாகி உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கேரள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய புலனாய்வு முகமை அமைப்பு அதிகாரிகளும் விசாரணையை துவங்கியுள்ளனர்.இந்நிலையில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய
மார்ட்டின் என்பவர் கொடக்கரா காவல் நிலையத்தில் சரணடைந்தார். மேலும் அவர் வெளியிட்ட வீடியோவில், “சபையின் செயல்பாடு தனக்கு பிடிக்கவில்லை என்பதால் கடந்த 4 ஆண்டுகளாக சபையின் கூட்டங்களுக்கு செல்வதில்லை, அந்த சபையின் நடவடிக்கைகள் அனைத்தும் ராஜ துரோகம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.இதனிடையே குண்டு வெடிப்பு குற்றவாளி டொமினிக் மார்ட்டின் தான் என்பதை காவல்துறை விசாரணையில் உறுதி செய்துள்ளது. வீட்டில் இருந்தும், மொபைல் போனிலிருந்தும் குண்டுவெடிப்பு நிகழ்ச்சியதற்கான ஆவணங்கள் சிக்கின. சபை தேச விரோத செயலில் ஈடுபட்டதால் குண்டு வைத்ததாக சரணடைந்த மார்ட்டின் முகநூல் நேரலையிலும் கூறியிருந்தார். தானே வெடிகுண்டு தயாரித்தாரா? எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.