திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை தென்மண்டலத்தில் அமைந்துள்ள 3 ரயில்வே பணிமனைகளில் மிகப்பெரிய பணிமனையாகும். இப்பணிமனையானது 1926இல் அடிக்கல் நாட்டப்பட்டு 1928ல் கட்டி முடிக்கப்பட்டு 96 வருடங்கள் ஆகிறது. 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பணிமனை கிழக்கிந்திய கம்பெனி என்று அழைக்கப்படும் பிரிட்டிஸ் கட்டிடக்கலை வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டது. இங்கு பழுதடைந்த ரயில் பெட்டிகள் பழுது பார்க்கப்படும். புதிய ரயில் பெட்டிகளும்தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிமனையில் இன்று ( 21.10.2023 ) ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஆயுத பூஜையை முன்னிட்டு பணிமனையை பொதுமக்கள் சுற்றிப் பார்க்க இன்று ஒரு நாள் மட்டும் ரயில்வே நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது. இதனை ஒட்டி பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் சாரை, சாரையாக வந்து பொன்மலை பணிமனையை சுற்றிப் பார்த்தனர். அப்போது மாணவ-மாணவியரில் சிலர் பணிமனையில் உள்ள ரயில் என்ஜின் பக்கத்தில் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.