திருச்சி சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடிக்க முயன்ற மாநகராட்சி ஊழியர்களிடம் தகராறு…
போலீசார் சமரசம்....
திருச்சி மாநகரில், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. பிடிக்கப்படும் மாடுகளை ஏற்றி வர வாகனம் ஒன்றும் வாங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ( 27.09.2023 ) திருச்சி பொன்நகர் பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் பிடித்துக் கொண்டு இருந்தனர். இதனை பார்த்த மாட்டின் உரிமையாளருக்கும், மாநகராட்சி ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் அங்கு வந்த திமுக கவுன்சிலர் ராமதாஸ் இரு தரப்பினரை சமாதான படுத்தினார். அப்போது ஒரு வாலிபர், திமுக கவுன்சிலரிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த செசன்ஸ் கோர்ட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினரையும் சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.