திருச்சி குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் தேரோட்டம்…(படங்கள்)
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர்...
திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள குணசீலம் வெங்கடாஜலபதி கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி , தினமும் பெருமாள் ஹனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று ( 26.09.2023 ) விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக காலை 5-30 மணிக்கு பெருமாள் உபய நாச்சியார்களுடன் தேரில் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க அதிர்வேட்டுகளுடன் காலை 8.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.
இதில், திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் ஐஏஎஸ் , காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ, ஊராட்சி மன்ற தலைவர் குருநாதன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் பக்தி பரவசத்துடன் அங்கப்பிரதட்சணம் செய்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.