Rock Fort Times
Online News

வந்தே பாரத் ரயில் கூடுதல் நிறுத்தங்கள் குறித்து பரிசீலிக்கப்படும்…

திருச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

நெல்லை–சென்னை இடையிலான முதல் வந்தே பாரத் ரயிலை இன்று (24-9-2023) காணொளி காட்சி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். நெல்லையில் நடைபெற்ற துவக்க விழா நிகழ்ச்சியில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,  உள்ளிட்டோர் கலந்து கலந்து கொண்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். பின்னர், நெல்லையில் இருந்து மதியம் 1.10 க்கு புறப்பட்ட வந்தே பாரத் ரயில் விருதுநகர், மதுரை வழியாக திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தை மாலை 5-05 மணிக்கு வந்தடைந்தது.  அப்போது பள்ளி மாணவ- மாணவிகள் பேண்டு வாத்தியம் முழங்க உற்சாக வரவேற்பளித்தனர். பா.ஜ.க.வினர் கட்சி கொடியேந்தி வந்தே பாரத் ரயிலை வரவேற்றனர்.பின்னர்,மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தி யாளர்களிடம் கூறுகையில், கடந்த 2009- 14 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் ரயில்வே துறை சார்பில் ரயில்வே மேம்பாட்டிற்காக தமிழகத்திற்கு 800 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் நடப்பாண்டில் மட்டும் 6000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமித் பாரத் திட்டத்தின்மூலம் தமிழகத்தின் பல்வேறு ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில் முற்றிலும் இந்திய தொழில் நுட்பத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்க பரிசீலிக்கப்படும்.
முன்பதிவு இல்லா பெட்டிகள் இணைக்க வாய்ப்பில்லை. சென்னை-நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் தற்போது 6 ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. கூடுதல் நிறுத்தங்கள் கேட்டு கோரிக்கை வருகிறது. அது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்