தமிழக காவல்துறையின் 62 ஆம் ஆண்டு மண்டலங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் இன்று திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் தொடங்கியது. இந்த விளையாட்டுப் போட்டியில் சைக்கிளிங்,கொக்கோ மற்றும் தடகளப் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த விளையாட்டுப் போட்டிகளை தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். விளையாட்டு போட்டியின் துவக்க விழாவில் பெண் புறாக்களை மற்றும் பலூன்களை பறக்க விட்டு ஒலிம்பிக் ஜோதியை பெற்றுக் கொண்டு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு போட்டியை தொடங்கி வைத்தார். 2009 இல் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் திருச்சியை சேர்ந்த காவலர் சுப்பிரமணி 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று பதக்கம் வென்றார். கடந்த 2020 மாநிலங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் 14 பதக்கங்கள் பெற்று இந்திய அளவில் இரண்டாவது இடத்தை பிடித்தோம். அதேபோல் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற உள்ள தடகள போட்டியில் தமிழகத்தை சேர்ந்த காவல்துறை விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே காவலர்கள் விளையாட்டு துறையில் சிறந்து விளங்குவதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் உதாரணமாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.இவ்விழாவில் ஆயுத அப்படை கூடுதல் காவல் துறை இயக்குனர் ஜெயராம், திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன், டி ஐ ஜி சரவண சுந்தர், திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்திய பிரியா ஐஜி ராதிகா, திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் உதவி ஆணையர்கள் ஆய்வாளர்கள் துணை கண்காணிப்பாளர்கள் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.