Rock Fort Times
Online News

7 பவுன் நகையை திருடி விட்டு வீட்டை பூட்டி சென்ற கொள்ளையன்….

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள காவேரிபாளையம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவா் விவசாயி மணி. இவர் வழக்கம்போல காலையில் வீட்டை பூட்டி அதன் சாவியை சுவிட்ச் பாக்ஸ் மீது வைத்தார். பின்னர், மனைவியுடன் அங்குள்ள தோட்டத்துக்கு சென்றார். மதியம் இருவரும் வீடு திரும்பினர். அப்போது ஸ்விட்ச் பாக்ஸ் மீது வைத்திருந்த சாவியை காணாமல் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 7 பவுன் நகையை காணவில்லை. மர்ம நபர் ஸ்விட்ச் பாக்ஸ் மீது சாவி வைப்பதை நோட்டமிட்டு அந்த சாவியை எடுத்து கதவைத் திறந்து நகையை திருடி விட்டு வீட்டை பூட்டி சாவியை எடுத்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வாத்தலை போலீசில் மணி புகார் செய்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்