த.மு.மு.க. 29 -வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி மேற்கு மாவட்டம் சார்பில் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு இரண்டு சக்கர நாற்காலிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட தலைவரும், மாநகராட்சி கவுன்சிலருமான அ.பைஸ்அகமது தலைமையில் நடைபெற்றது. மருத்துவ உபகரணங்களை மணப்பாறை சட்டமன்ற உறுப்பினரும், மமக பொதுச்செயலாளருமான அப்துல்சமது எம்.எல்.ஏ., மாநில பொருளாளர் ஷபியுல்லாஹ்கான் ஆகியோர் அரசு மருத்துவமனை முதல்வர் நேருவிடம் ஒப்படைத்தனர். இந்நிகழ்வில் தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராகிம் ஷா, மமக செயலாளர் இப்ராகிம், பொருளாளர் ஹீமாயூன், மருத்துவ அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட துணை அணி செயலாளர்கள் ஜீபைர், சதாம், அப்துல் ரஹ்மான் பகுதி, கிளை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.