துபாயில் இருந்து தனியார் விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆண் பயணி ஒருவர்,
4 செல்போன்கள், லேப்டாப் மற்றும் 2 ஸ்மார்ட் வாட்ச் ஆகியவற்றை எடுத்து வந்ததுடன் அதில் 359 கிராம் எடைகொண்ட தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.26.59 லட்சம் இருக்கும் என்று அதிகாரிகள் தொிவித்தனா்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.