திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட அன்பு நகரை சேர்ந்தவர் சௌந்தரபாண்டியன் (வயது 57). சிறுநாவலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியரான இவர், உப்புலியபுரத்திலிருந்து சொந்த வேலை காரணமாக தனது இரு சக்கர வாகனத்தில் துறையூர் நோக்கி சிறுநத்தம் பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது துறையூரில் இருந்து தம்மம்பட்டி நோக்கி சென்ற தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சௌந்தரபாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக தனியார் பேருந்து ஓட்டுனர் மீது துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.