காலியாக உள்ள 3,359 காவலர், தீயணைப்பு வீரர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்..!
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு...
காலியாக உள்ள 3,359 இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாாியம், இரண்டாம் நிலைக் காவலர்(ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை ) இரண்டாம் நிலை சிறைக் காவலா் மற்றும் தீயணைப்பாளா் பணிகளுக்கான நேரடி தோ்வுக்கு விண்ணப்பதாரரிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பதவிகளுக்கு வருகிற 18-08 -2023 முதல் அடுத்த மாதம் 17-09-2023 வரை விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். காவல்துறையில், இரண்டாம் நிலை காவலர் பணிக்கு 780 பெண்கள், 1,819 ஆண்கள், சிறை மற்றும் சீர்திருத்த துறையில் இரண்டாம் நிலை சிறைகாவலர் பணிக்கு ஆண்கள் 83 பேர், பெண்கள் 3 பேர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் தீயணைப்பாளர் பணிக்கு 674 ஆண்கள் என மொத்தம் 3,359 காலி இடங்கள் உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு 10 சதவீதமும், அதனை சார்ந்த வாரிசுதாரர்களுக்கு 10 சதவீதமும், முன்னாள் ராணுவத்தினருக்கு 5 சதவீதம் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படும். தற்போதுள்ள அரசு விதிகளின்படி வகுப்பு வாரி இட ஒதுக்கீடு வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 18 முதல் அதிகபட்சம் 26 வரை ஆகும். கூடுதல் தகவல்கள் மற்றும் விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கு இவ்வாரியத்தின் இணையதளமான www.tnusrb.tn.gov.in ஐ பார்த்து தெரிந்து கொள்ளலாம் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.