தமிழ்நாட்டில் நவீன தொழில்நுட்ப முறையில் மாணவர்களுக்கு கல்வி …!
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு..
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கணிதம், அறிவியல், தொழில்நுட்ப அறிவை வளர்ப்பதற்காக வானவில் மன்றம் செயல்பட்டு வருகிறது. இதில் ஸ்டெம் என்று திட்டத்திற்கு பெயர் வைத்து அதில் மாணவர்களுக்கான அறிவியல், தொழில்நுட்பம், கணிதம் குறித்து கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி காட்டூர் பகுதியில் உள்ள அரசு ஆதி திராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வி துறையும், அமெரிக்கன் இந்தியா foundation இணைந்து STEM Innovation and Learning Center மற்றும் Drone Satellite vehicle mission என்கிற திட்டம் தொடக்க விழா இன்று ( 0808.2023 )நடைபெற்றது. இதில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டு ஸ்டெம் ஆய்வகத்தை திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் மயில்சாமி அண்ணாதுரை பேசுகையில்,
தமிழக பள்ளி கல்வி துறை எவ்வாறு சிறப்பாக செயல்படுகிறது என்பதற்கு இந்த திட்டம் ஒரு உதாரணம். இஸ்ரோவில் உருவாக்கப்பட்ட அனைத்து திட்டங்களுக்கும் திட்ட இயக்குனர்களாக இருப்பவர்களும், இருந்தவர்களும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான்.ஆண்களுக்கு சமமாக பெண்கள் இன்று இருக்கிறார்கள். சமையலில் மட்டுமல்ல
ராக்கெட் அறிவியலிலும் பெண்கள் சிறப்பாக இருக்கிறார்கள். இனிவரும் காலங்களில் இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே தமிழக அரசு பள்ளிகள் முன்மாதிரியாக இருக்கும். மாணவர்கள் அவர்களுக்கான வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.பி.எஸ்.எல்.வி. முதலில் குறைவான தூரமே பயணித்தது. அடுத்தடுத்து அது அதிக தூரம் பயணித்தது. எந்த இடத்தில் தொடங்குகிறோம் என்பது முக்கியமல்ல. எந்த திசை நோக்கி செல்கிறோம் என்பது தான் முக்கியம். அதற்கான திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள் என்றார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில்,
கடந்த காலத்தில் எப்படி பாடம் கற்று கொடுத்தோமோ, அதையே தற்போதும் செய்தால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும். எனவே, தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு பல்வேறு நவீன, தொழில்நுட்ப அம்சங்களை கொண்டு பாடம் கற்றுத் தரப்படுகிறது. மாணவர்கள் அவர்களின் சுய அறிவை பயன்படுத்தவே இது போன்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த திட்டங்களின் மூலம் படிப்பையும் தாண்டி மாணவர்களுக்கு கூடுதல் தகவல் கற்று தரப்படுகிறது என்றார்.
விழாவில், சவுத் அமெரிக்கன் இந்தியன் பவுண்டேஷன் பாஸ்கரன், திருச்சி மாநகராட்சி மண்டலம் 3-ன் தலைவர் மதிவாணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், ஆசிரியர் மனசு சிகரம் சதீஷ்குமார், காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.