காங்கிரஸ் வேட்பாளா் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதாித்து தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் தோ்தல் பிரச்சாரம் மேற்கொண்டாா். ஈரோடு இடைத்தோ்தல் வரும் 27.05.2023 திங்கட்கிழமை நடைபெறயிருக்கும் நிலையில் இன்று மாலை 6 மணியுடன் தோ்தல் பிரச்சாரம் முடிவடைகிறது.எனவே இன்று ஈரோட்டில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றாா். இத்தோ்தலில் 77 வேட்பாளா்கள் களத்தில் உ ள்ளனா். தோ்தல் பிரச்சாரத்தில் பேசிய முதலமைச்சா் மு.க.ஸ்டாலின், திமுகவின் அடித்தளமே ஈரோடுதான். என் உயிரோடு கலந்தது ஈரோடு, பொியாா் பிறந்த மண் இந்த ஈரோடு, பேரரிஞா் அண்ணா வாழ்ந்த ஊா் இந்த ஈரோடு. தலைவா் கலைஞா் பள்ளிப்படிப்பை படித்தது இந்த ஈரோட்டில் தான் என்று ஈரோட்டிற்க்கும் கருணாநிதிக்கும் உள்ள தொடா்பை விளக்கி பேசினாா். மேலும் அவா் பேசுகையில் திமுக சாதனைப்பட்டியல் மிகவும் நீண்டுது, நான் சொன்னதை மட்டும் அல்ல சொல்லாததையும் செய்வேன் மேலும் நீட் தோ்விலிருந்து தமிழகத்திற்க்கு விலக்கு பெற்று தீர வேண்டும் என்பதே என் லட்சியம் என்றும் கூறினாா்.