இந்திய ரயில்வே நாடு முழுவதும் காலியாகவுள்ள சுமார் 9,970 அசிஸ்டன்ட் லோகோ பைலட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக, கிழக்கு ரயில்வே மண்டலத்தில் 1,461 உதவி ஓட்டுநர் பணி இடங்களும், தென் மத்திய ரயில்வேயில் 989 இடங்களும், மேற்கு ரயில்வேயில் 885 இடங்களும், தென் கிழக்கு ரயில்வேயில் 796 இடங்களும், கிழக்கு ரயில்வேயில் 768 இடங்களும், மேற்கு மத்திய ரயில்வேயில் 759 இடங்களும், கிழக்கு மத்திய ரயில்வேயில் 700 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. தெற்கு ரயில்வேயில் 510 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ டிப்ளமோ, பி.இ, பி.டெக் மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் ஆகிய பாடப்பிரிவுகளில் டிப்ளமோ, இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : ஏப்.10 முதல் விண்ணப்பிக்கலாம்: விண்ணப்பிக்க கடைசி நாள் : . மே 9- 2025. இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்தை பார்வையிடவும்.

Comments are closed.