திருச்சி மனிதம் சமூகப்பணி மையம் மற்றும் டிரஸ்ட் சார்பில் திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள பிஷப் திராப் அரங்கில் மனிதம் டிரஸ்ட்-யின் இன்பஒளி மற்றும் 8ம் ஆண்டு துவக்க விழா நேற்று( 28-10-2023) மாலை கொண்டாடப்பட்டது. விழாவில் முதியவர்கள், குழந்தைகள், திருநங்கைகள் மற்றும் பெண்கள் என சுமார் 200 நபர்களுக்கு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் 100 சதவீதம் கல்வி சென்றடைய வேண்டும் என்கிற நோக்கத்தில் பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதனை எல்லோருக்கும் எடுத்து செல்லும் விதமாக மனிதம் டிரஸ்ட் நமது மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுவது பாராட்டுக்குரியது. இதுபோன்ற நிகழ்ச்சிகளும், செயல்பாடுகளும், மாணவர்களை உற்சாகப்படுத்துகிறது என்றார். நிகழ்ச்சியை மனிதம் டிரஸ்ட்–ன் இயக்குனரும், நிறுவனருமான ரா.தினேஷ்குமார் தலைமையேற்று நடத்தினார். இந்த நிகழ்வில் முக்கிய நபர்கள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மனிதம் சமூகப்பணி மையம் மற்றும் டிரஸ்ட்-ன் செயலாளர் மோகனதாஸ் நன்றி கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.