திருச்சி கேம்பியன் ஆங்கிலோ- இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் 89-வது ஆண்டு விளையாட்டு விழா இன்று ( 15.07.2023 ) நடைபெற்றது. திருச்சி மான்போர்ட் அருட் சகோதரர்கள் மாகாண மேலதிகாரி அருட் சகோதரர் எம்.இருதயம் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மாணவர் மற்றும் பாரா நீச்சல் சர்வதேச சாம்பியனும், சென்னை ஐ.ஐ.டி.முதன்மை இயக்குனருமான ஜஸ்டின் ஜேசுதாஸ், முன்னாள் மாணவர் மற்றும் ட்ரிபிள் ஜம்ப் சர்வதேச சாம்பியன் மற்றும் கோவை ஜி.எஸ்.டி.நுண்ணறிவு இயக்குனரக நிர்வாக உதவியாளர் எஸ்.என்.முகமது சலாகுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பிரார்த்தனையுடன் விழா தொடங்கியது. அதனைதொடர்ந்து கொடி ஏற்றுதல், வரவேற்பு நடனம், மார்ச் பாஸ்ட், நினைவு பரிசுகள் வழங்குதல், முன்னாள் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள், பரிசு வழங்குதல் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து மாணவ- மாணவியருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிா்வாகத்தினா், ஊழியா்கள் மற்றும் மாணவா்கள் செய்திருந்தனா்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.