திருச்சி விமான நிலையம் அருகே புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்பட்டு பெரிய குளம் அமைந்துள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தை சுத்தப்படுத்தி பூங்கா அமைத்து இருக்கைகள், நீரூற்றுகள் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இங்கு பொதுமக்கள் பொழுது போக்கிற்காக படகு சவாரி, நீர்ப்பறவைகளுக்கான 5 வாழ்விடத் தீவுகள் ஆகியவை அமைக்கப்படுகிறது. மேலும், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி செலவில் நீரூற்றுகள் அமைக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் 15-வது நிதி குழுவில் இருந்து சுமார் 500 மீட்டர் நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகளில் இருந்து குளத்தை பாதுகாக்க இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இங்கு அலங்கார விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், அந்த பகுதி மின்னொளியில் ஜொலிக்கிறது. தற்போது இந்த குளத்தில் சுமார் 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன, அடுத்த மாதம் அனைத்து பணிகளும் நிறைவடையும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments are closed, but trackbacks and pingbacks are open.