Rock Fort Times
Online News

நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி முன்னெச்சரிக்கையாக திருச்சியில் 8 ரவுடிகள் கைது…

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 8 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் ரவுடிகளின் நடவடிக்கைகளை முற்றிலுமாக தடுக்கும் பொருட்டு 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த மார்ச்.16ம் தேதி முதல் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 8 ரவுடிகள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்டுள்ள 8 ரவுடிகளில் A+ வகை ரவுடியான சங்கர், A வகை ரவுடிகளான முயல் கார்த்திக் ஆகியோர் மீது பல்வேறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. B வகை ரவுடிகளான ரவி போஸ்கோ (எ) போஸ்கோ, சுரேஷ் (எ) குளித்தலை சுரேஷ், மணிவண்ணன் (எ) மணி,சந்தோஷ் மீது கொடுங்காய வழக்கும் பதிவு செய்யப்பட்டு, அனைத்து வழக்குகளிலும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் திருச்சி மாவட்டத்தில் மாவட்ட எஸ்,பி வருண்குமார் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு 22.3 கிராம் கஞ்சா, குட்கா பொருட்கள் 136.6 கிலோ கிராம், மதுபான வகைகள் 276.2 லிட்டர், கள்-346 லிட்டரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, பல்வேறு கட்சியினர் மீது 11 தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கஞ்சா, குட்கா, மணல் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் 26 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், வாகன விதிமீறல் தொடர்பாக 12,723 வழக்குகளும், ₹.1,23,64,500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு, தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் மேற்பார்வையில், நிலையான கண்காணிப்பு குழு-19, பறக்கும்படை குழு-19, சோதனை சாவடிகள்-15 அமைக்கபட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட எஸ்.பி வருண்குமார், மேற்பார்வையில், 3 கூடுதல் எஸ்பிக்கள், 11 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 37 இன்ஸ்பெக்டர்கள், 253 எஸ்.ஐ, 1292 போலீசார் மற்றும் 267 துணை ராணுவப் படையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.மேலும், திருச்சி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர்கள் குறித்த தகவல்களை திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் 9487464651 என்ற எண்ணில் 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

🔴: ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம் 6-ம் திருநாள்

1 of 850

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்