ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு மருத்துவர் உட்பட 7 பேர் உயிரிழப்பு: ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தவர் சுட்டுக்கொலை…! ( வீடியோ இணைப்பு)
காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தின் ககன்கீர் பகுதியில் நேற்று மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில், மருத்துவர் உட்பட 7 பேர் பலியானார்கள். ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாராமுல்லா மாவட்டத்தின் உரி பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டையொட்டி, பயங்கரவாதிகள் ஊடுருவ உள்ளனர் என உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த முயற்சியை முறியடிக்கும் ஒரு பகுதியாக இந்திய ராணுவம் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த பணியின்போது, அந்த பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அவர்கள் போலீசாரை கண்டதும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனை தொடர்ந்து உஷாரான ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் பதிலடி கொடுத்தனர். இந்த சம்பவத்தில், ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த பயங்கரவாதியை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். பயங்கரவாதியிடம் இருந்து, ஏ.கே.ரக துப்பாக்கி ஒன்று, ஏ.கே. ரக துப்பாக்கிகளுக்கான 57 குண்டுகள், 2 கைத்துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தும் மூன்று உறைகளுடன் கூடிய தோட்டாக்கள் மற்றும் பிற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பயங்கரவாத தாக்குதலில், மருத்துவர் ஒருவர் உட்பட 7 பேர் பலியான சம்பவத்திற்கு ஜம்மு – காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
Comments are closed.