திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தில் 7 வீடுகளுக்கு தீ வைப்பு-பள்ளி மாணவர்களின் நோட்டு புத்தகங்கள் எரிந்து நாசம், மர்ம நபர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் தர்ணா…!
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அம்பேத்கர் நகரில் 200க்கும் மேற்பட்ட ஒரே சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர், இந்தநிலையில் பிப்ரவரி 1ம் தேதி முதல் இங்கு வசித்து வரும் வெண்ணிலா, ராணி, அமராவதி, ஆறுமுகம், பாப்பாத்தி, சம்பூர்ணம், காந்தம்மாள் ஆகியோர்களின் குடிசை வீடுகளில் மர்ம நபர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தீ வைத்து விட்டு ஓடி விடுகின்றனர். இதில், அந்த குடிசைகள் தீயில் எரிந்து நாசமானதுடன் வீட்டில் இருந்த ஆவணங்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் நோட்டு புத்தகங்கள் நாசமடைந்தன. பாதிக்கப்பட்டவர்கள் உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் குடிசைகளுக்கு தீ வைக்கும் மர்ம நபர்களை கைது செய்யக்கோரி உப்பிலியபுரம் அண்ணாசிலை அருகே பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த உப்பிலியபுரம் போலீசார் பாதிக்கப்பட்டவர்களிடம் நடவடிக்கை மேற்கொள்வதாக கூறியதை தொடர்ந்து தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது.
Comments are closed.