Rock Fort Times
Online News

தமிழக அரசில் சார்பதிவாளர் உட்பட 645 காலி பணியிடங்கள்- * ஆகஸ்ட் 13 வரை விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC), குரூப்-2 மற்றும் 2 ஏ தேர்வின் மூலம் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 645 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. சார்பதிவாளர், வனவர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-2 மற்றும் 2 ஏ தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மொத்தம் 645 பணியிடங்கள் குரூப்-2 மற்றும் 2 ஏ தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.இந்த தேர்வுக்கு இன்று( ஜூலை 15) முதல் ஆகஸ்ட் 13 வரை டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 18-ந்தேதி இதற்கான முதல் நிலை தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்