கரூரில் கடந்த 3-ந் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல்களை அமலாக்கத்துறை தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி கணக்கில் வராத ரூ.22 லட்சம் , 16.6 லட்சம் மதிப்பிலான கணக்கில் வராத விலை உயர்ந்த பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செந்தில் பாலாஜியின் 60 நில ஆவணங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.