Rock Fort Times
Online News

திருச்சியில் அடுத்தடுத்த சம்பவம் : கல்லூரி மாணவி, கர்ப்பிணி உள்பட 6 பேர் மாயம் போலீசார் விசாரணை!

திருச்சி பிராட்டியூர் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் மகாமுனி இவரது மகள் நந்தினி (வயது 18) .இவர் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நந்தினி வீட்டில் இருந்து வெளியே சென்றார் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை பெற்றோர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர் இந்த நிலையில் நந்தினி அவரது தாயார் மாலதிக்கு செல்போனில் தொடர்பு கொண்டார் அப்போது பிராட்டியூர் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் என்ற வாலிபரை தான் திருமணம் செய்ததாகவும் இனிமேல் தன்னைத் தேட வேண்டாம் என்றும் கூறியுள்ளார். இருப்பினும் மாலதி போலீசில் புகார் செய்ததன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .இதை போன்று கே.கே நகர் பகுதியில் 18 வயது இளம் பெண் ஒருவர் மாயமானார் .திருச்சி பர்மா காலனி கவி பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் காட்டு ராஜா இவரது மகள் தமிழ்ச்செல்வி ( 18 ). இவர் காங்கேயத்தில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை செய்து வந்தார். காங்கேயத்தில் தங்கி இருந்த அவர் கடந்த 28ஆம் தேதி திருச்சிக்கு செல்வதாக தனது சகோதரியிடம் கூறிச் சென்றார் ஆனால் திருச்சிக்கு அவர் வந்தடையவில்லை இதுகுறித்து தாயார் புஷ்பம் கே.கே நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீரங்கத்தில் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து வந்த நிலையில் ஒரு இளம் பெண் மாயமானார். ஸ்ரீரங்கம் திருவளர்ச்சோலை கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் இவரது மகள் அபிநயா இவருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இந்த நிலையில் வீட்டிலிருந்து அபிநயா திடீரென மாயமானார் இதுகுறித்து அவரது தாயார் வைஜெயந்தி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தார் போலீசார் அபிநயாவை தேடி வருகின்றனர்.
இதேபோல் தில்லை நகரில் ஒரு சிறுமி மாயமானார். திருச்சி சங்கிலிகண்டபுரம் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி உடன் மளிகை கடைக்கு சென்றார் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. காந்தி மார்க்கெட் இதுகுறித்து தில்லை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மேலும் திருச்சி உறையூர் கல் நாயக்கன் தெரு எழில் நகர் பகுதியைச் சேர்ந்த காளியப்பன் மனைவி பானு என்கிற சமீம் பானு மாயமாகியுள்ளார். இவர் சமீப காலமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து மாயமாகி விட்டார்.
காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவர் மாயமாகியுள்ளார் பாலக்கரை ஆழ்வார் தோப்பு முருகன் ஸ்டோர் பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் பாட்ஷா அவரது மனைவி மக பூ நிஷா இந்த தம்பதிகளுக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது நான்கு மாத கர்பிணியாக இருக்கும் மகபூ நிஷா அருகிலுள்ள ஜெராக்ஸ் கடைக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.இதுகுறித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்